Tuesday, June 14, 2016

ஜோதிட பாடம் 15

கேந்திராதிபத்திய தோஷம்


கேந்திராதிபத்திய தோஷம் என்பது லக்ன,சதுர்த்த, சப்த, தசம வீடுகளை ஆதிபத்தியமாக கொண்ட கிரகங்களால் ஏற்படும் தோஷமாகும்.கேந்திராதிபத்திய தோஷம் சுபர்களுக்கு கெட்டது.பாவர்களுக்கு நல்லது.எடுத்துகாட்டாக மேஷ லக்னத்தை எடுத்துக்கொள்வோம் மேஷ லக்னத்திற்கு 1, 4, 7, 10 க்குடையவர்கள் யார் யாரென்றால் 1 லக்னம் செவ்வாய், 4 சந்திரன், 7 சுக்கிரன், 10 சனி. இங்கு செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன் பாவிகள் அவர்களால்  இந்த லக்ன ஜாதகத்திற்கு கேந்திராதிபத்திய தோஷமில்லை. ஆனால் சுக்கிரன், மற்றும் வளர்பிறை சந்திரன் இந்த இருவரும் கேந்திராதிபத்திய தோஷம் உடையவர்கள். இவர்கள் இந்த லக்னத்திற்கு 1,4, 7, 10ம் இடங்களில் அமர்ந்தால் அது கடுமையான கேந்திராதிபத்திய தோஷமாகும்.கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் தான் ஆதிபத்தியம் பெற்ற ஸ்தானத்தின் பலன்களை தராது அல்லது காலதாமதமாக தரும் அல்லது பலன் தந்தும் பயன் இராது.உதாரணமாக மேஷ லக்னத்திற்கு 7ல் சுக்கிரன் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும், திருமணமும் வெகு விரைவில் நடக்கும் என்றுதான் பலன் கூறுவார்.ஆனால் உண்மை நிலை வேறு இந்த அமைப்புள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது நடந்தாலும் அந்த அழகான மனைவியிடம் போகம் அனுபவிக்க முடியாமல் போகும் அதனால் வேறு பெண்களை நாடி செல்லும் நிலை ஏற்படும்.இந்த லக்னத்திற்கு 7ல் சுக்கிரன் பல பெண்களுடன் போகம் பண்ணுவான் மனைவியை தவிர. ஆகையால் கேந்திராத்திபதியம்  பெற்ற சுப கிரகங்கள் 3, 6,8,12ல்  மறைய வேண்டும்  அல்லது 2, 5, 9, 11ல் இருக்க வேண்டும்.இதே போல் மற்ற லக்னத்திற்கும் பலன் காண்க.

No comments:

Post a Comment