Tuesday, May 31, 2016

ஜோதிட பாடம் 12

மிதுன லக்னம்

மிதுன லக்னத்திற்கு 3க்குடய சூரியன், 6 மற்றும் 11க்குடய செவ்வாய் தீமை செய்யக்கூடிய கிரகங்களாகும். உபய லக்னத்திற்கு 7க்குடயவர் பாதகாதிபதியாவார். மிதுன லக்னம் உபய லக்னமாகும். 7,10க்கு அதிபதியான குரு இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாவதால் அவரும் தீமையை செய்வார்.
சனி 8 மற்றும் 9 ஆகிய வீடுகளுக்கு அதிபதியாகிறார். அவருடைய 8மிட ஆதிபத்தியம் அரை பாவியாக்குகிறது. அதனால் சனி அரை சுபனாகி பாதி நன்மையை மட்டும் செய்யகூடியவராகிரார். சுக்கிரனும் 5 மற்றும் 12க்கு அதிபதியாவதால் அவனும் அரை சுபனாகிறார். புதன் மட்டுமே முழு சுபனாகி யோகத்தை அளிக்ககூடியவராகிறார். சுக்கிரன், புதன், சனி கூடினால் ராஜ யோகமாகும். குரு, செவ்வாய் 6,8,12ல் மறைவது நல்லது. குரு கேந்திரதிற்கு அதிபதியாகி கேந்திராதிபத்திய தோஷம் பெறுவதால் கேந்திரத்தில் அமர்வது நல்லதல்ல. சந்திரன் இந்த லக்னத்திற்கு சமமாகிறார்.

No comments:

Post a Comment