Saturday, May 28, 2016

ஜோதிட பாடம் 10

மேஷ லக்னம் 

சூரியன், சந்திரன், குரு முழு நன்மையளிக்க கூடிய கிரகங்கள். செவ்வாய் 
லக்னதிற்க்கும் 8க்கும் ஆதிபத்தியம் பெறுவதால் அரை சுபன் அரை பாவியாகிறார். ஆகையால் செவ்வாய் பாதி நன்மையளிக்க கூடிய கிரகமாகிறார். சுக்கிரன்(2, 7) கேந்திராதிபதியம் பெறுவதால் அரை சுபனாகிறார். ஆகையால் சுக்கிரன் பாதி நன்மையளிக்கக்கூடிய 
கிரகமாகிறார்.புதன் 3 மற்றும் 6க்கு அதிபதியாவதால் முழு பாவியாகி கெடுதல்களை மேஷ லக்னகாரர்களுக்கு செய்கிறார். மேஷ லக்னம் சர லக்னமாவதால் சனி(10, 11) பாதகாதிபதியாகிறான். சனியும் முழு கெடுதல்களை மேஷ லக்னகாரர்களுக்கு பண்ணுகிறார். அனைத்து சர லக்னதிற்க்கும் 11ம் அதிபதி பாதகாதிபதியாகிறார். மேஷ லக்னத்திற்கு புதன் 6ல், 8ல், 12ல் மறைவது நல்லது.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பது இதுதான். சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பெறுவதால் சுக்கிரன் மறைவது ஓரளவுக்கு நமையளிக்ககூடிய விஷயமே. அவன் 12ல் மறைந்தால் ராஜயோகத்தை கொடுப்பான். 8ல், 6ல் மறைவதும் நன்மையே. ஆனால் 2ம் இட ஆதிபத்தியம் பாதிக்கப்படும். கண் நோய் ஏற்படும். சனி எங்கிருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்துகிறான். சூரியன், சந்திரன், குரு ஆகிய கிரகங்கள் இந்த லக்னத்திற்கு மறையக்கூடாது(6,8,12ல் ). குரு 12க்கு அதிபதியாகி 6, 8, 12ல் மறைவது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும்.ஆனால் அவனது பாக்கியாதிபத்தியம் கெட்டுவிடும்..செவ்வாய் 8க்குரியவனாகி 6, 8, 12ல் மறைவது விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.ஆனால் அவனுடைய லக்ன சுபாதிபத்தியம் கெட்டுவிடும்.

No comments:

Post a Comment