Saturday, June 11, 2016

ஜோதிட பாடம் 14

பாதகாதிபதி

பாதகாதிபதி ஒரு லக்னத்திற்கு என்ன செய்வார்? ரிஷப லக்னத்தை எடுத்துக்கொள்வோம். ரிஷப லக்னத்திற்கு பதகாதிபதி 9க்குடைய சனி.
ரிஷப லக்னம் ஸ்திர லக்னமாகும்.அணைத்து ஸ்திர லக்னத்திற்கும்  9க்குடையவன் பாதகாதிபதியாவர். 9க்குடைய ஸ்தானம் தந்தையை குறிக்கும். பாதகாதிபதியாக இங்கு தந்தை ஸ்தானத்தை பெற்ற சனி எப்படி செயல்படுவார் என்றால் ரிஷப லக்ன ஜாதகருக்கு தந்தையால் எந்தவித நன்மையையும் ஜாதகர் பெற முடியாது.பொதுவாகவே இவர்கள் தந்தை இருந்தும் இல்லாதவர்கள் அதாவது கூட இருந்தாலும் பிரயோஜனமில்லை  அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள் அல்லது சிறுவயதிலேயே தந்தையை இழந்து விடுவார்கள்.இதே போன்று சர மற்றும் உபய லக்னங்களுக்கும் பலன் காண்க.

No comments:

Post a Comment