Saturday, May 28, 2016

ஜோதிட பாடம் 11

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்திற்கு 2 மற்றும் 5ம் ஆதிபத்தியம் பெற்ற புதன் முழு யோககாரகனாகிறார். சுக்கிரன் லக்னத்திற்கும்  6ம் வீட்டிற்க்கும் அதிபதியாவதால் அரை சுபனாகி பாதி நன்மையளிக்கக்கூடிய கிரகமாகிறார். ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீட்டதிபதி பாதகாதிபதி என்பது விதி. ரிஷப லக்னம் ஸ்திர லக்னமாகும். 9 மற்றும் 10ம் ஆதிபத்தியம் பெற்ற சனி இவர்களுக்கு பாதகாதிபதியாகிறார். பாதகாதிபதியான சனி இவர்களுக்கு எப்படி நன்மை செய்வார். ஆனாலும் லக்னாதிபதிக்கு நட்பு  கிரகமாவதால் ஓரளவிற்கு நன்மை செய்கிறார். 3ம் ஆதிபத்தியம் பெற்ற சந்திரன் கெடுதல்களை செய்கிறார். குரு 8 மற்றும் 11க்கு அதிபதியாவதால் முழு பாவியாகி கெடுதல்களை செய்கிறார். செவ்வாய் 7 களத்திரம் மற்றும் 12க்கும் அதிபதியாவதால் ஓரளவிற்கு நன்மை செய்கிறார். சூரியன் இந்த லக்னத்திற்கு சமமாகிறார். 8 க்குரிய குரு 6,8, 12ல் மறைவது நல்லது இது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும். 

No comments:

Post a Comment