Saturday, October 22, 2016

ஜோதிட பாடம் 19

கிரஹ அவஸ்தைகள்

ஜாதகத்தில் கிரஹங்கள்  நன்மையை செய்யுமா அல்லது தீமையை செய்யுமா என்பதை நுணுக்கமாக அறிந்துகொள்ள  கிரக அவஸ்தை உதவுகிறது.  ஒற்றை(Odd sign) ராசிகளில் இருக்கும் கிரகத்திற்கு  முதல் 6 டிகிரி வரை பால அவஸ்தை, 6 -12 டிகிரி வரை குமார அவஸ்தை, 12 - 18 டிகிரி வரை யுவ அவஸ்தை, 18 - 24 வரை வ்ருத்த  அவஸ்தை, 24 - 30 வரை மரண அவஸ்தை. இரட்டை ராசிகளில்(Even Sign) இருக்கும் கிரகத்திற்கு பால 24-30,குமார 18 - 24, யுவ 12 - 18, வ்ருத்த 6 - 12, மரண 0 - 6 அவஸ்தையிலும் இருக்கும்.இங்கு பால என்பது குழந்தை பருவத்தையும், குமார என்பது சிறார்  பருவத்தையும், யுவ என்பது இளைஞன் பருவத்தையும், வ்ருத்த என்பது வயோதிக பருவத்தையும் குறிக்கும். மரண அவஸ்தை என்பது இறப்பை குறிக்கும். பால மற்றும் வயோதிக பருவத்திலுள்ள கிரகம் 1/4 பங்கு பலனை அளிக்கும். குமார பருவத்திலுள்ள கிரகம் 1/2 பங்கு பலனை அளிக்கும். யுவ பருவத்திலுள்ள கிரகம் முழு பலனை அளிக்கும். மரண அவஸ்தையிலுள்ள கிரகம் எந்த பலனையும் அளிக்காது. அவஸ்தையில் பல வகைகள் உள்ளது. அவற்றை அடுத்த பாடத்தில் விரிவாக காணலாம்.

Wednesday, June 29, 2016

ஜோதிட பாடம் 18

லக்னத்திற்குரிய காரகங்கள்

தலை

உயிர்,

ஆயுள்

குணம்,

பொறுமை,

பொறாமை,

அறிவு,

சிந்தனை,

குழப்பம்,

சந்தோசம்,

முகம் மலர்ச்சி,

கோபம்,

நல்ல எண்ணங்கள்,

பணிவு,

பக்குவம்,

தலைமுடி,

தோற்றம்,

உருவம்,

முக அமைப்பு,

பழிவாங்கும் குணம்

பார்வையை தூண்டுதல்

சிரிப்பு,

குரோதம்,

கோபம்,

கற்பனை,

கனவுகள்,

திட்டம் தீட்டுதல்,

மகிழ்வு,

துக்கம்,

பெருமை,

புகழ்,

முடிவெடுக்கும் திறன்,

தூண்டுதல் உணர்வுகள்,

ஞாபகசக்தி,

தற்பெருமை,

இழுக்கு,

கர்வம்,

அடங்கா தன்மை

மரண சிந்தனை

நிறம்

உயரம்

உடலில் அனைத்தும் பாகங்களையும் தூண்டும் திறன்

நுகர்ச்சி தன்மை

ஞானம்

ஜோதிட பாடம் 17

கிரகங்களும் அதன் நாடிகளும்


குரு, புதன், சனி வாத நாடி

சூரியன், செவ்வாய், ராகு, கேது பித்த நாடி

சந்திரன், சுக்கிரன் சிலேத்தும நாடி

கிரகங்களும் பஞ்ச பூதங்களும்


சந்திரன், சுக்கிரன் அப்பு கிரகங்கள்

செவ்வாய் பிரிதிவி கிரகம்

குரு, சூரியன் தேயு கிரகங்கள்


புதன் வாயு கிரகம்


சனி, இராகு, கேது ஆகாய கிரகங்கள்

கிரகங்களும் அதன் சுவைகளும்


சூரியன் காரம்


சந்திரன் உப்பு


செவ்வாய் உறைப்பு

புதன் உவர்ப்பு


குரு இனிப்பு


சுக்கிரன் புளிப்பு


சனி துவர்ப்பு


இராகு புளிப்பு


கேது புளிப்பு


கிரகங்களும் அவற்றிற்கு உகந்த மலர்களும்

சூரியன் செந்தாமரை


சந்திரன் வெள்ளரலி


செவ்வாய் செண்பகம்


புதன் வெண்காந்தள்

குரு முல்லை


சுக்கிரன் வெண்தாமரை


சனி கருங்குவளை


இராகு மந்தாரை


கேது செவ்வல்லி


கிரகங்களும் அதன் சமித்துகளும்


சூரியன் எருக்கு


சந்திரன் முறுக்கு

செவ்வாய் கருங்காலி


புதன் நாயுருவி


குரு அரசு


சுக்கிரன் அத்தி


சனி வன்னி

ராகு அறுகு


கேது தர்பை

ஜோதிட பாடம் 16

கிரகங்களின் வாகனங்கள்

சூரியன் தேர், மயில்


சந்திரன் நரி, முத்து விமானம்

செவ்வாய் அன்னம்


புதன் குதிரை


குரு யானை


சுக்கிரன் கருடன்


சனி காகம்


இராகு ஆடு


கேது சிங்கம்




கிரகங்களும் எட்டுத்திசைகளும்

சூரியன் கிழக்கு


சந்திரன் வடமேற்கு

செவ்வாய் தெற்கு


புதன் வடக்கு

குரு வடகிழக்கு


சுக்கிரன் தென் கிழக்கு

சனி மேற்கு


இராகு தென்மேற்கு

கேது வட மேற்கு




கிரகங்களும் அதன் அதி தேவதை கடவுள்களும்


சூரியன் சிவபெருமான்


சந்திரன் பார்வதி


செவ்வாய் சுப்பிரமண்யர்


புதன் விஷ்ணு


குரு பிரம்மா, தட்சிணாமூர்த்தி


சுக்கிரன் லக்ஷ்மி, இந்திரன், வருணன்


சனி யமன், சாஸ்தா


இராகு காளி, துர்க்கை, கருமாரி


கேது விநாயகர், சண்டிகேசுவரர்

Tuesday, June 14, 2016

அறிவிப்பு

12 லக்ன பொது பலன்கள் முடிந்தவுடன் பழைய தமிழ் ஜோதிட நூல்களிலிருந்து பாடல்கள் விளக்க உரையுடன் பதிவிடப்படும்.

ஜோதிட பாடம் 15

கேந்திராதிபத்திய தோஷம்


கேந்திராதிபத்திய தோஷம் என்பது லக்ன,சதுர்த்த, சப்த, தசம வீடுகளை ஆதிபத்தியமாக கொண்ட கிரகங்களால் ஏற்படும் தோஷமாகும்.கேந்திராதிபத்திய தோஷம் சுபர்களுக்கு கெட்டது.பாவர்களுக்கு நல்லது.எடுத்துகாட்டாக மேஷ லக்னத்தை எடுத்துக்கொள்வோம் மேஷ லக்னத்திற்கு 1, 4, 7, 10 க்குடையவர்கள் யார் யாரென்றால் 1 லக்னம் செவ்வாய், 4 சந்திரன், 7 சுக்கிரன், 10 சனி. இங்கு செவ்வாய், சனி, தேய்பிறை சந்திரன் பாவிகள் அவர்களால்  இந்த லக்ன ஜாதகத்திற்கு கேந்திராதிபத்திய தோஷமில்லை. ஆனால் சுக்கிரன், மற்றும் வளர்பிறை சந்திரன் இந்த இருவரும் கேந்திராதிபத்திய தோஷம் உடையவர்கள். இவர்கள் இந்த லக்னத்திற்கு 1,4, 7, 10ம் இடங்களில் அமர்ந்தால் அது கடுமையான கேந்திராதிபத்திய தோஷமாகும்.கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற கிரகம் தான் ஆதிபத்தியம் பெற்ற ஸ்தானத்தின் பலன்களை தராது அல்லது காலதாமதமாக தரும் அல்லது பலன் தந்தும் பயன் இராது.உதாரணமாக மேஷ லக்னத்திற்கு 7ல் சுக்கிரன் இருந்தால் நல்ல அழகான மனைவி அமையும், திருமணமும் வெகு விரைவில் நடக்கும் என்றுதான் பலன் கூறுவார்.ஆனால் உண்மை நிலை வேறு இந்த அமைப்புள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது நடந்தாலும் அந்த அழகான மனைவியிடம் போகம் அனுபவிக்க முடியாமல் போகும் அதனால் வேறு பெண்களை நாடி செல்லும் நிலை ஏற்படும்.இந்த லக்னத்திற்கு 7ல் சுக்கிரன் பல பெண்களுடன் போகம் பண்ணுவான் மனைவியை தவிர. ஆகையால் கேந்திராத்திபதியம்  பெற்ற சுப கிரகங்கள் 3, 6,8,12ல்  மறைய வேண்டும்  அல்லது 2, 5, 9, 11ல் இருக்க வேண்டும்.இதே போல் மற்ற லக்னத்திற்கும் பலன் காண்க.

Saturday, June 11, 2016

ஜோதிட பாடம் 14

பாதகாதிபதி

பாதகாதிபதி ஒரு லக்னத்திற்கு என்ன செய்வார்? ரிஷப லக்னத்தை எடுத்துக்கொள்வோம். ரிஷப லக்னத்திற்கு பதகாதிபதி 9க்குடைய சனி.
ரிஷப லக்னம் ஸ்திர லக்னமாகும்.அணைத்து ஸ்திர லக்னத்திற்கும்  9க்குடையவன் பாதகாதிபதியாவர். 9க்குடைய ஸ்தானம் தந்தையை குறிக்கும். பாதகாதிபதியாக இங்கு தந்தை ஸ்தானத்தை பெற்ற சனி எப்படி செயல்படுவார் என்றால் ரிஷப லக்ன ஜாதகருக்கு தந்தையால் எந்தவித நன்மையையும் ஜாதகர் பெற முடியாது.பொதுவாகவே இவர்கள் தந்தை இருந்தும் இல்லாதவர்கள் அதாவது கூட இருந்தாலும் பிரயோஜனமில்லை  அல்லது தந்தையை பிரிந்து வாழ்வார்கள் அல்லது சிறுவயதிலேயே தந்தையை இழந்து விடுவார்கள்.இதே போன்று சர மற்றும் உபய லக்னங்களுக்கும் பலன் காண்க.

ஜோதிட பாடம் 13

கடக லக்னம்

கடக லக்னத்திற்கு 12, 3க்குடைய புதன் பாவியாவான் அவன் நன்மை செய்ய மாட்டான். அதேபோல கடக லக்கினம் சர லக்கினமாகும் சர லக்னத்திற்கு 11ம் இடத்ததிபதி பாதகாதிபதியாவார். ஆகையால் சுக்கிரனும் நன்மை செய்ய மாட்டார். செவ்வாய், சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் முழு யோகத்தை கொடுப்பார்கள். குரு 9 மற்றும் 6ம் ஆதிபத்தியம் பெறுவதால் அரை சுபனாகி பாதி நன்மையளிக்ககூடிய கிரகமாகிறார். சனியும் 7 மற்றும் 8க்கு ஆதிபத்தியம் பெறுவதால் அரை சுபனாகி பாதி நன்மையளிக்கக்கூடிய கிரகமாகிறார். புதன் 3, 6, 8, 12ல் மறைவது நல்லது. குரு 6,8, 12ல் மறைவது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும், ஆனால் அவனது 9ம் சுப ஆதிபத்தியம் கெட்டுவிடும். சனி 6,8,12ல் மறைவது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும். இந்த லக்னத்திற்கு இளைய, மூத்த சகோதரர்களால் நன்மை இல்லை.

Tuesday, May 31, 2016

ஜோதிட பாடம் 12

மிதுன லக்னம்

மிதுன லக்னத்திற்கு 3க்குடய சூரியன், 6 மற்றும் 11க்குடய செவ்வாய் தீமை செய்யக்கூடிய கிரகங்களாகும். உபய லக்னத்திற்கு 7க்குடயவர் பாதகாதிபதியாவார். மிதுன லக்னம் உபய லக்னமாகும். 7,10க்கு அதிபதியான குரு இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாவதால் அவரும் தீமையை செய்வார்.
சனி 8 மற்றும் 9 ஆகிய வீடுகளுக்கு அதிபதியாகிறார். அவருடைய 8மிட ஆதிபத்தியம் அரை பாவியாக்குகிறது. அதனால் சனி அரை சுபனாகி பாதி நன்மையை மட்டும் செய்யகூடியவராகிரார். சுக்கிரனும் 5 மற்றும் 12க்கு அதிபதியாவதால் அவனும் அரை சுபனாகிறார். புதன் மட்டுமே முழு சுபனாகி யோகத்தை அளிக்ககூடியவராகிறார். சுக்கிரன், புதன், சனி கூடினால் ராஜ யோகமாகும். குரு, செவ்வாய் 6,8,12ல் மறைவது நல்லது. குரு கேந்திரதிற்கு அதிபதியாகி கேந்திராதிபத்திய தோஷம் பெறுவதால் கேந்திரத்தில் அமர்வது நல்லதல்ல. சந்திரன் இந்த லக்னத்திற்கு சமமாகிறார்.

Saturday, May 28, 2016

ஜோதிட பாடம் 11

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்திற்கு 2 மற்றும் 5ம் ஆதிபத்தியம் பெற்ற புதன் முழு யோககாரகனாகிறார். சுக்கிரன் லக்னத்திற்கும்  6ம் வீட்டிற்க்கும் அதிபதியாவதால் அரை சுபனாகி பாதி நன்மையளிக்கக்கூடிய கிரகமாகிறார். ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீட்டதிபதி பாதகாதிபதி என்பது விதி. ரிஷப லக்னம் ஸ்திர லக்னமாகும். 9 மற்றும் 10ம் ஆதிபத்தியம் பெற்ற சனி இவர்களுக்கு பாதகாதிபதியாகிறார். பாதகாதிபதியான சனி இவர்களுக்கு எப்படி நன்மை செய்வார். ஆனாலும் லக்னாதிபதிக்கு நட்பு  கிரகமாவதால் ஓரளவிற்கு நன்மை செய்கிறார். 3ம் ஆதிபத்தியம் பெற்ற சந்திரன் கெடுதல்களை செய்கிறார். குரு 8 மற்றும் 11க்கு அதிபதியாவதால் முழு பாவியாகி கெடுதல்களை செய்கிறார். செவ்வாய் 7 களத்திரம் மற்றும் 12க்கும் அதிபதியாவதால் ஓரளவிற்கு நன்மை செய்கிறார். சூரியன் இந்த லக்னத்திற்கு சமமாகிறார். 8 க்குரிய குரு 6,8, 12ல் மறைவது நல்லது இது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும். 

ஜோதிட பாடம் 10

மேஷ லக்னம் 

சூரியன், சந்திரன், குரு முழு நன்மையளிக்க கூடிய கிரகங்கள். செவ்வாய் 
லக்னதிற்க்கும் 8க்கும் ஆதிபத்தியம் பெறுவதால் அரை சுபன் அரை பாவியாகிறார். ஆகையால் செவ்வாய் பாதி நன்மையளிக்க கூடிய கிரகமாகிறார். சுக்கிரன்(2, 7) கேந்திராதிபதியம் பெறுவதால் அரை சுபனாகிறார். ஆகையால் சுக்கிரன் பாதி நன்மையளிக்கக்கூடிய 
கிரகமாகிறார்.புதன் 3 மற்றும் 6க்கு அதிபதியாவதால் முழு பாவியாகி கெடுதல்களை மேஷ லக்னகாரர்களுக்கு செய்கிறார். மேஷ லக்னம் சர லக்னமாவதால் சனி(10, 11) பாதகாதிபதியாகிறான். சனியும் முழு கெடுதல்களை மேஷ லக்னகாரர்களுக்கு பண்ணுகிறார். அனைத்து சர லக்னதிற்க்கும் 11ம் அதிபதி பாதகாதிபதியாகிறார். மேஷ லக்னத்திற்கு புதன் 6ல், 8ல், 12ல் மறைவது நல்லது.கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பது இதுதான். சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பெறுவதால் சுக்கிரன் மறைவது ஓரளவுக்கு நமையளிக்ககூடிய விஷயமே. அவன் 12ல் மறைந்தால் ராஜயோகத்தை கொடுப்பான். 8ல், 6ல் மறைவதும் நன்மையே. ஆனால் 2ம் இட ஆதிபத்தியம் பாதிக்கப்படும். கண் நோய் ஏற்படும். சனி எங்கிருந்தாலும் பாதிப்பை ஏற்படுத்துகிறான். சூரியன், சந்திரன், குரு ஆகிய கிரகங்கள் இந்த லக்னத்திற்கு மறையக்கூடாது(6,8,12ல் ). குரு 12க்கு அதிபதியாகி 6, 8, 12ல் மறைவது விபரீத ராஜயோகத்தை கொடுக்கும்.ஆனால் அவனது பாக்கியாதிபத்தியம் கெட்டுவிடும்..செவ்வாய் 8க்குரியவனாகி 6, 8, 12ல் மறைவது விபரீத ராஜ யோகத்தை கொடுக்கும்.ஆனால் அவனுடைய லக்ன சுபாதிபத்தியம் கெட்டுவிடும்.

ஜோதிட பாடம் 9

கால பலம்

சந்திரன், சனி, செவ்வாய் இரவில் பலமுடயவர்கள். சூரியன், குரு, சுக்கிரன் பகலில் பலமுடயவர்கள். புதனுக்கு பகல் இரவு இரண்டிலும் பலம் உண்டு.

பக்ஷ பலம்

சுக்ல பக்ஷத்தில் அதாவது வளர்பிறையில் வளர் பிறை சந்திரன்,குரு, சுக்கிரன், தனித்த புதன் அல்லது சுப கிரகங்களுடன் கூடிய புதன் ஆகியோருக்கு பலம் உண்டு.கிருஷ்ண பக்ஷத்தில் அதாவது தேய் பிறையில் தேய்பிறை சந்திரன்,சனி, செவ்வாய், பாவிகளுடன் சேர்ந்த புதன் ஆகியோருக்கு பலம் உண்டு.மொத்தத்தில் வளர்பிறையில் சுப கிரகங்களும் , தேய் பிறையில் பாப கிரகங்களும் பலம் பெறுகிறார்கள்.

ஜோதிட பாடம் 8

கிரகங்களின் திக் பலம்

திக் என்பது திசையை குறிக்கும். குருவும் புதனும் லக்னத்தில் அதாவது கிழக்கு திசையில் திக் பலம் பெறுகிறார்கள். சந்திரனும் சுக்கிரனும் 4ம் இடத்தில் அதாவது வடக்கு  திசையில் திக் பலம் பெறுகிறார்கள்.சூரியனும் , செவ்வாயும் 10ம் இடத்தில் அதாவது தெற்கு  திசையில் திக் பலம் பெறுகிறார்கள். சனி 7ம் வீட்டில் அதாவது மேற்கில்  திக் பலம் பெறுகிறார்.


ஜோதிட பாடம் 7

கிரகங்களின் பலம் வரிசைப்படி


  1. கேது -  கேதுவே முதன்மையான பலம் பொருந்திய கிரகம்
  2. ராகு
  3. சூரியன்
  4. சந்திரன்
  5. சுக்கிரன்
  6. குரு
  7. புதன்
  8. செவ்வாய்
  9. சனி 
கிரகங்களின் பல வரிசைப்படி கேது லக்னத்தில் இருந்தால் அந்த லக்னம் வலிமையானதாக மாறும். அந்த லக்னத்தின் பலா பலன்களை கேதுவே எடுத்து நடத்துவார்.அதே போல் ஒரு வீட்டில் பல கிரகங்கள் இருந்தால் அதில் கிரகங்களின் பல வரிசைப்படி எந்த கிரகம் வலிமையனதோ அதுவே அந்த வீட்டின் பலா பலன்களை ஏற்று நடத்தும்.



ஜோதிட பாடம் 6

 காரகங்கள் 
1
லக்னம்
உயிர்
ஜாதகர்
தலை
2
2ம் வீடு
தனம் குடும்பம் வாக்கு 

முகம் வலது கண்
3
3ம் வீடு
தைரியம் வீரியம் சிறு   பிரயாணம்
இளையசகோதரம்
கழுத்து, வலது காது
4
4ம் வீடு
வீடு
வாகனம்
பள்ளி கல்வி சுகம்
தாய்
மார்பு
5
5ம் வீடு
பூர்வ புண்ணியம்
குழந்தை,
தாய் மாமன்
தந்தை வழி தாத்தா
மேல் வயிறு
6
6ம் வீடு
தற்காலிக நோய்தற்காலிக கடன்தண்டனைஅடிமை வேலை
எதிரிகள்
கீழ் வயிறு
7
7ம் வீடு
களத்திரம்திருமணம்
மனைவி
இடுப்பு
8
8ம் வீடு
ஆயுள்நிரந்தர நோய்,   நிரந்தர கடன்,அவமானம்,மனைவிமூலம் வரும் தனம்,

பிறப்புறுப்புக்கள்,குதம்முதுகு
9
9ம் வீடு
பாக்கியம்பூர்வ புண்ணியம்பூர்வீக சொத்துக்கள்,தொலைதூர பிரயாணம்
தந்தை
தொடை
10
10ம் வீடு
ஜீவனம்

முழங்கால்
11
11ம் வீடு
லாபம்
மூத்தசகோதரம், நண்பர்கள்

கணுக்கால், இடது காது
12
12ம் வீடு
நித்திரை, போகம், விரயம்
தாய் வழி தாத்தா
பாதம்இடது கண்




ஜோதிடம் பாடம் 5

12 ராசிகள் மற்றும் அவற்றின் தன்மைகள் தொடர்ச்சி 

1
மேஷம் 

செவ்வாய்
ஆட்சி
சூரியன்உச்சம்
சனி நீச்சம்
அஸ்வினி, பரணி கார்த்திகை 1
2
ரிஷபம்

சுக்கிரன்ஆட்சி
சந்திரன்உச்சம்

கார்த்திகை 2,3,4
ரோகிணி, மிருகசீருஷம் 1, 2
3
மிதுனம்

புதன் ஆட்சி


மிருகசீருஷம் 3,4
திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
4
கடகம்

சந்திரன்ஆட்சி
குரு உச்சம்
செவ்வாய்நீச்சம்
புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்
5
சிம்மம்

சூரியன்ஆட்சி


மகம். பூரம், உத்திரம் 1
6
கன்னி

புதன் ஆட்சி
புதன்உச்சம்
சுக்கிரன்நீச்சம்
உத்திரம் 2,3,4
ஹஸ்தம், சித்திரை 1, 2
7
துலாம்

சுக்கிரன்ஆட்சி
சனி உச்சம்
சூரியன்நீச்சம்
சித்திரை 3,4
சுவாதி, விசாகம் 1,2,3
8
விருச்சிகம்
செவ்வாய்ஆட்சி

சந்திரன்நீச்சம்
விசாகம் 4 அனுஷம், கேட்டை
9
தனுசு

குரு ஆட்சி


மூலம், பூராடம், உத்திராடம் 1
10
மகரம்

சனி ஆட்சி
செவ்வாய்உச்சம்
குரு நீச்சம்
உத்திராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2
11
கும்பம்

சனி ஆட்சி


அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3
12
மீனம்

குரு ஆட்சி
சுக்கிரன்உச்சம்
புதன்நீச்சம்
பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி




ஜோதிடம் பாடம் 4

12 ராசிகள் மற்றும் அவற்றின் தன்மைகள் தொடர்ச்சி 

1
மேஷம் 


செவ்வாய்
மிருகம்
7 கதிர்கள் 
நேர்மறை
வறண்ட
ராசி
இறந்த காலம்

2
ரிஷபம்


சுக்கிரன்
மிருகம்
8 கதிர்கள்
எதிர்மறை
பாதி செழிப்பான ராசி
நிகழ் காலம்

3
மிதுனம்


புதன்
மனிதன்
5 கதிர்கள்
நேர்மறை
வறண்ட
ராசி
எதிர் காலம்
4
கடகம்


சந்திரன்
மிருகம்
3 கதிர்கள்
எதிர்மறை
செழிப்பான ராசி
இறந்த காலம்

5
சிம்மம்


சூரியன்
மிருகம்
7 கதிர்கள்
நேர்மறை
வறண்ட
ராசி
நிகழ் காலம்

6
கன்னி


புதன்
மனிதன்
11 கதிர்கள்
எதிர்மறை
வறண்ட
ராசி
எதிர் காலம்
7
துலாம்


சுக்கிரன்
மனிதன்
2 கதிர்கள்
நேர்மறை
செழிப்பான ராசி
இறந்த காலம்

8
விருச்சிகம்
செவ்வாய்
மிருகம்
4 கதிர்கள்
எதிர்மறை
செழிப்பான ராசி
நிகழ் காலம்

9
தனுசு


குரு
மிருகம்
மனிதன்
6 கதிர்கள்
நேர்மறை
பாதி செழிப்பான ராசி
எதிர் காலம்
10
மகரம்


சனி
மிருகம்
8 கதிர்கள்
எதிர்மறை
பாதி செழிப்பான ராசி
இறந்த காலம்

11
கும்பம்


சனி
மனிதன்
8 கதிர்கள்
நேர்மறை
பாதி செழிப்பான ராசி
நிகழ் காலம்

12
மீனம்


குரு
மிருகம்
மனிதன்
27 கதிர்கள்
எதிர்மறை
செழிப்பான ராசி
எதிர் காலம்