Saturday, May 28, 2016

ஜோதிடம் பாடம் 1

ராசிகள் மொத்தம் 12.இந்த ராசிகளை ஒரு வட்டத்திற்குள் அடைத்தால் அதுதான் ராசி சக்கரம்.ஒரு வட்டத்திற்கு 360 டிகிரி. இந்த 360 டிகிரியை 12 ராசிக்கு பிரித்தால் ஒரு ராசிக்கு 30 டிகிரி வரும்.அதாவது 360/12=30.
நக்ஷத்ரங்கள் மொத்தம் 27. இந்த 27 நட்சத்திரங்களை 360 டிகிரிக்கு பிரித்தால் ஒரு நட்சத்திரத்திற்கு 13.3 டிகிரி வரும். அதாவது 360/27=13.3.
இதே போன்று ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதம். ஆகவே 27*4=108 பாதம். இந்த 108 பாதத்திற்கு 360 ஐ பிரித்தால் ஒரு பாதத்திற்கு 3.3 டிகிரி வரும்.ஒரு ராசிக்கு 30 டிகிரி அல்லவா. 30 டிகிரியில் எத்தனை நட்சத்திர பாதம் வரும்? 9 பாதம் வரும். அதாவது 9*12=108.

No comments:

Post a Comment