கிரஹ அவஸ்தைகள்
ஜாதகத்தில் கிரஹங்கள் நன்மையை செய்யுமா அல்லது தீமையை செய்யுமா என்பதை நுணுக்கமாக அறிந்துகொள்ள கிரக அவஸ்தை உதவுகிறது. ஒற்றை(Odd sign) ராசிகளில் இருக்கும் கிரகத்திற்கு முதல் 6 டிகிரி வரை பால அவஸ்தை, 6 -12 டிகிரி வரை குமார அவஸ்தை, 12 - 18 டிகிரி வரை யுவ அவஸ்தை, 18 - 24 வரை வ்ருத்த அவஸ்தை, 24 - 30 வரை மரண அவஸ்தை. இரட்டை ராசிகளில்(Even Sign) இருக்கும் கிரகத்திற்கு பால 24-30,குமார 18 - 24, யுவ 12 - 18, வ்ருத்த 6 - 12, மரண 0 - 6 அவஸ்தையிலும் இருக்கும்.இங்கு பால என்பது குழந்தை பருவத்தையும், குமார என்பது சிறார் பருவத்தையும், யுவ என்பது இளைஞன் பருவத்தையும், வ்ருத்த என்பது வயோதிக பருவத்தையும் குறிக்கும். மரண அவஸ்தை என்பது இறப்பை குறிக்கும். பால மற்றும் வயோதிக பருவத்திலுள்ள கிரகம் 1/4 பங்கு பலனை அளிக்கும். குமார பருவத்திலுள்ள கிரகம் 1/2 பங்கு பலனை அளிக்கும். யுவ பருவத்திலுள்ள கிரகம் முழு பலனை அளிக்கும். மரண அவஸ்தையிலுள்ள கிரகம் எந்த பலனையும் அளிக்காது. அவஸ்தையில் பல வகைகள் உள்ளது. அவற்றை அடுத்த பாடத்தில் விரிவாக காணலாம்.